Sunday, 14 September 2014

கிழிஞ்சு போச்சு

திரைப் படங்களிலே
அரை குறை ஆடை ஆட்டமே
பாலுணர்வத் தூண்டுகிறதே!
அடப் போடா... அடிப் போடி...
அப்படிக் காட்டாட்டா
யாருங்கடா... யாருங்கடி...
படம் பார்க்கப் போவாங்க...?
படம் பார்த்தவங்களைப் பார்த்தா
மாற்றான்/மாற்றாள்
விழி உருள நோக்க
நடிகர்/நடிகைகளின் கோலத்திலேயே
திரைப்படக் கொட்டகைக்கு வெளியே
நடை போடுறாங்களே!
காலம் கடந்த பின்
காதுக்கு எட்டிய செய்தி
"எல்லாம் கிழிஞ்சு போச்சு!"

11 comments:

  1. வணக்கம்
    அண்ணா.
    அருமையாக சொன்னீங்கள்.... இப்படியான கட்டங்கள் இல்லாவிட்டால் படம் பிரபலியமாகாது.... காலத்துக்கு தகுந்த மாதிரி.....த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. ஆமாம்.எல்லாமே "எல்லாம் கிழிஞ்சு போச்சு!"

    ReplyDelete
  3. ஹாஹாஹா அருமை நண்பரே! இப்போதைய கால கட்டத்தில் இப்படி வந்தால்தான் படம் ஓடுது போலும்...நல்ல படங்களும் வரத்தான் செய்கின்றன...ஆனால்???.....ஏகன் என்ற ஒரு அஜீத் படம் அதில் நயன் தாரா கல்லூரி விரிவுரையாளராக வருகிறார்...ஆனால் அவரது ஆடையோ.....கல்லூரி விரிவுரையாளர் அணியும் ஆடை போல் இல்லை.....அங்கேயே படத்தின் யதார்த்தம் அடிபட்டுப் போகின்றது.....இப்படிக்கூட விரிவுரையாளர் இருக்கின்றாரா என்ன? எல்லாமே கிழிஞ்சு போச்சு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. வணக்கம்



    தங்களுக்கு  விருது இரண்டை பகிர்ந்துள்ளேன் அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்


    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதோ விருது அள்ளிச் செல்லுங்கள்....:



    -நன்றி-


    -அன்புடன்-


    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அகவையில் பெரிதாயினும் அறிவிற் சிறியன் - எனக்கு
      தாம் விருதுகளை வழங்கியுள்ளீரென அறிந்ததும்
      என் உள்ளத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி! - இந்த
      சின்னாளையும் ஓராளாகப் பொருட்படுத்தி
      விருதுகளை வழங்கியமைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. ஹிந்தி திரைஉலகம் இன்னும் ஒரு படி மேலேறி இன்னும் மோசமாய் ,நடிகர் அமீர்கான் நிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. எல்லாம் கிழிஞ்சுதான் போச்சு. இது பற்றி நானும் எழுதிய ஒரு பதிவு. படித்துப் பாருங்கள்

    http://www.gowsy.com/2010/10/blog-post_72.html

    ReplyDelete
    Replies
    1. தமிழ் பண்பாட்டோடு தாய் வளர்க்க
      தமிழ் பண்பாடு சீர்கெட்டுப் போவதாய்
      சேய் சொல்லும் செய்தியைப் படித்தேன்
      சிறந்த பதிவு, பாராட்டுகள்.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.