Sunday, 21 September 2014
நாலுகாசு வைப்பிலிட்டு
கடன் படாதீர்!
கடன் பட்டால் கலங்கி நிற்பீர்!
உறவுக்குப் பகை கடன்!
கடனுள்ள வரை காதலும் வராது;
மனைவியும் கிட்ட நெருங்காள்!
அடடே! அப்படியுமா...
இன்னும் இன்னும்
எத்தனையோ சொல்லி எச்சரித்தாலும்
நம்மாளுகள்
வைப்பக அடகுநகைப் பகுதியில் தான்
விடிகாலையில் வரிசையில் நிற்கிறார்களே!
விரலுக்கேற்ற வீக்கம் போல
வரவுக்கேற்ப செலவமைத்து
கைக்கெட்டியதைக் கையாள முடிந்தால்
நீங்களும்
கடனை நாட மாட்டியள்
வைப்பகங்களையும்
மூடித்தான் ஆகவேண்டி வருமே!
அடேங்கப்பா!
வாழ்க்கைக்குப் பணம் வேணும் தான்
அதுக்காகப் பாருங்கோ...
கடன் பட்டால்
தூக்குப் போட்டுச் சாகவேண்டி வருமே!
கடன்பட்டு
விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுமாயின்
விருப்பங்களையே கைவிடுங்கள்...
வாழ்க்கையில் மகிழ்வைச் சேகரிக்க
நாலுகாசு வைப்பிலிட்டு - அந்த
காசை வைச்சு
விருப்பங்களை நிறைவேற்றலாமே!
Subscribe to:
Post Comments (Atom)
விரலுக்கேற்ற வீக்கம் போல
ReplyDeleteவரவுக்கேற்ப செலவமைத்து
வாழ்வாங்கு வாழணும்..
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.மிக்க நன்றி.
Deleteவாழ வேண்டிய முறையை அருமையாய் சொன்னீர்கள் !
ReplyDeleteகடன் பட்டார் நெஞ்சம்போல்
ReplyDeleteகலங்கி நின்றார் இலங்கை வேந்தன்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
தங்கள் ஒவ்வொரு செயலிலும் வெற்றியீட்டுவீர்களென வாழ்த்தி தாங்கள் வழங்கிய விருதினைப் பணிவோடு ஏற்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி.
வரவறிந்து செலவு செய்க!
ReplyDeleteகடன் படாதீர்!
ReplyDeleteகடன் பட்டால் கலங்கி நிற்பீர்!
உறவுக்குப் பகை கடன்!
கடனுள்ள வரை காதலும் வராது;
மனைவியும் கிட்ட நெருங்காள்!//
உண்மை! உண்மை! உண்மை! நல்ல வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லியிருக்கின்றீர்கள்!