Friday, 15 August 2014
நல்லுறவும் நமது முடிவிலேயே...
பணத்தை வைத்தோ
படிப்பை வைத்தோ
இணையாத உறவது
அன்பை வைத்தே
அணைந்த உறவிலேயே...
விரிசல் வந்தால் போதுமே
நல்லுறவும் கெட்டுப் போகுமே!
உள்ளத்திலே
உண்மை அன்பிருக்க
உடனடி முடிவும்
உறவை முறிக்கலாமே...
அன்பின்றித் தொற்றிய உறவை
அன்பாக அணைத்தாலும்
நெருங்கிய உறவாகலாமே...
உறவு கெட்டுப் போகாமல்
பார்த்துக் கொண்டால் நன்றே!
நம்மவர் நல்வாழ்விலே
பழகிய உறவுகள் பாதியில் பிரியலாம்
காலம் கரைய
தவறுகள் உணரத் தேடியே வரலாம்
பழசை மறந்து - நாம்
பணிவாய் நல்லுறவைப் பேணுவோமே!
நிலையற்ற வாழ்விலே
நிலையான உறவின்மைக்கு
மனித முடிவே எதிரி...
தடுமாறும் உள்ளத்தை
தளரவிடாமல் பேணினால் தானே
உறுதியான முடிவெடுத்தே
நிலையான உறவைப் பேண இடமுண்டே!
நாம் எடுக்கின்ற
ஒவ்வொரு நல்ல முடிவிலேயும் தான்
நெடுநாள் நிலைக்கக் கூடிய
நமது உறவுகளைப் பேண முடிகிறதே!
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
ReplyDeleteஅண்ணா
அழகிய வரிகள் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்க வாழ்த்துக்கள்
த.ம 1வதுவாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteதமிழ்மணத்தில் வாக்களித்து எனது பதிவிற்கு வலுச் சேர்த்துள்ளீர்கள்.
மிக்க நன்றி.
மிக மிக நல்ல வரிகள்! உண்மையான அன்பினால் விளைந்த உறவு முறியாமல் இருக்க தாங்கள் சொல்லியிருப்பது மிகச் சரியே!
ReplyDeleteதமிழ்மணத்தில் எப்படி வாக்களிப்பது.....ஓட்டுப்பட்டை வரவில்லையே இணைக்கவும் இல்லையே நண்பரே!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
பதிவின் மேல்; திகதியின் கீழ் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தென்படும். அதனைச் சொடுக்கினால் பயனர் பெயர், கடவுச் சொல் வழங்கி வாக்களிக்கலாம்.
அற்புத வரிகள் கண்டு, அதிசயித்தேன் நண்பரே...
ReplyDeleteநல்லுறவும் நமது முடிவிலேயே...உண்மைதான் ஐயா.
ReplyDeleteதம.2
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteதமிழ்மணத்தில் வாக்களித்து எனது பதிவிற்கு வலுச் சேர்த்துள்ளீர்கள்.
மிக்க நன்றி.
ஆஹா அருமையான வரிகள் அனைத்தும் உண்மை !
ReplyDeleteபொறுமை காத்தாலே போதும் அனைத்தும்
பொய்யாகி புலரும் பொழுது இனிதாக!
நன்றி !வாழ்த்துக்கள் சகோ ....!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.