Sunday, 10 August 2014
புரிவோம் உணர்வோம் அறிவோம் படிப்போம்
வருவார் போவார் பழகுவார் பிரிவார்
நம்மவர் பிறவிச் செயலே!
தருவார் கேட்பார் கொடுப்பார் பெறுவார்
நம்மவர் செயலில் பாரும்!
சேருவார் விலகுவார் தேடுவார் மறைவார்
நம்மவர் தேவைகளில் தெரியும்!
சொல்வார் செய்யார் கைகுலுக்குவார் தோள்கொடுக்கார்
நம்மவர் ஒற்றுமையில் புரியும்!
அழுவார் வெறுப்பார் துடிப்பார் துன்புறுவார்
நம்மவர் வினைப்பயன் அறுவடையிலே!
புரிவோம் உணர்வோம் அறிவோம் படிப்போம்
"உதவி செய் பலனை எதிர்பார்க்காதே" என்பது
இறைவன் ஏட்டினிலே...
"உதவி செய்திருந்தால் பலன் கிட்டும்" என்பது
மனிதன் வீட்டினிலே...
செயலில் தேவைகளில் ஒற்றுமையில் முடிவுகளில்
சுயநலம் விட்டுப் பொதுநலம் நோக்கின்
எம் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே!
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
ReplyDeleteஅண்ணா.
சபாஷ் சரியாக சொன்னீர்கள் பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteத..ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தமிழ்மணத்தில் வாக்களித்து எனது பதிவிற்கு வலுச் சேர்த்துள்ளீர்கள்.
Deleteமிக்க நன்றி.
சுயநலம் விட்டுப் பொதுநலம் நோக்கின்
ReplyDeleteஎம் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே!// அழகாகச் சொல்லி உள்ளீர்கள் ஐயா!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
அற்புதமான வார்த்தைகள் நண்பரே....
ReplyDeleteவருவார் போவார் பழகுவார் பிரிவார்
ReplyDeleteநம்மவர் பிறவிச் செயலே!------உண்மை நண்பரே......
arumaiyaaga irukkirathu
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.