Sunday, 22 June 2014

பிள்ளைகளின் காதிற்கு எட்டுமோ?!

உருளும் உலகில்
நகரும் நகர மணித்துளிகளில்
நம்மூரின் நினைவோடு
வாழும் நண்பர்களின் கருத்துக்கள்
ஊர்க்காரங்களுக்குப் பாடமாயிட்டுதே!
நம்ம ஊருப் பொடி, பெட்டைகளே!
நகருக்குப் படிக்கப் போனாலும் கூட
சுறுக்கா ஊருக்கு வந்திடணும்...
ஊரரிசிப் பழஞ்சோறும்
நம்மூரு எள்ளில ஊற்றிய
நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து
தொட்டுத் தின்ன சிவப்புச் சம்பல்
கடிச்சு நொறுக்க மோர்மிளகாய்ப் பொரியல்
எல்லாம் தயாரென்று
அப்பு, ஆச்சி அழுகிறது கேட்கிறதா?!
என்னத்தைப் படிச்சுக் கிழித்தாலும்
பிள்ளைகளே
ஊருக்க பணி செய்யாட்டி
ஊர்க்காரங்க திட்டுவாங்க...
கடவுளுக்கும்
பொறுக்காது பாருங்கோ...
உங்களைப் பெத்த கடமைக்காவது
ஊருக்க பணி செய்ய
உடனே வந்திடு என்கிறாள்
உங்களைப் பெத்த தாய்மார்!
உலகம் உருள உருள
நகர மணித்துளிகள் நகர நகர
பெத்த தாய்மாருக்கு
தங்கட பொடி, பெட்டைகள்
தங்கப் பவுணாக
ஊருக்குத் திரும்பும் வரை
நிம்மதியில்லை என்பதை
நகரத்தில் சுற்றும்
பிள்ளைகளின் காதிற்கு எட்டுமோ?!

5 comments:

  1. அற்புதமான கவிதை
    அதன் கனம் இழந்தவர்களுக்குத்தான்
    அதிகம் புரியும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. வணக்கம்

    எட்டவே எட்டாது. தாய்யின் மன நிலை இப்படி இருந்தால் பிள்ளைகளின் நிலை வேறு இப்போதுகாலம் உணர்ந்து கவிதந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.