அவளிடம்
நான்
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
சொல்ல நினைத்தாலும் கூட
அவளுக்கு முன்னாலே
சொல்ல வரமாட்டேங்குதே...
நம் முன்னே
இப்படி
எத்தனை ஆண்கள் உலாவுகின்றனர்!
அவனிடம்
நான்
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
சொல்ல நினைத்தாலும் கூட
அவனுக்கு முன்னாலே
சொல்ல வரமாட்டேங்குதே...
நம் முன்னே
இப்படி
எத்தனை பெண்கள் உலாவுகின்றனர்!
சொல்ல வரமாட்டேங்குதே என்ற
ஆண்களே... பெண்களே...
உங்கள் உள்ளத்திலே
காதலிக்கத் தோன்றுதே தவிர
காதல் அமையவில்லையே!
நெற்றி முட்ட நேரே
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
ஆணிடமோ பெண்ணிடமோ
சொல்லத் துணிவு வந்த நேரம் தான்
காதல் அமைந்தது (காதலாகியது) என்பேன்!
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
சும்மா கேட்டுப் பார்ப்போமென
முன் பின்
அறிமுகம் இல்லாதவரிடம் கேட்டால்
விசர்/பைத்தியம் என்ற பட்டமளிப்புத் தான்
உங்களுக்குக் கிடைக்குமென்பதை
மறந்துவிடாதீர்கள்!
புதுப்பா அருமை
ReplyDeleteசொல்லிச் சென்றவிதமும் புதுமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
வணக்கம்
ReplyDeleteரசிக்கவைக்கும் வரிகள்... அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
அருமை ஐயா... துணிவு என்றும் எதிலிலும் வேண்டும்...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
காதல் செய்வது எப்படியென ? தங்களிடம் தனியாக மெயில் அனுப்பி கேட்டுக்கொள்ளலாமோ ? அருமையாக இருந்தது.
ReplyDeleteKillergee
அனுபவித்துப் பார்த்வர்கள் ஒத்துக்கொள்ளும்படி அருமையான பதிவு.
ReplyDeleteதங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
Deleteஉங்கள் யாழ்பாவாணன்.