அடடே!
விடிய விடிய
பள்ளிக்குப் பிந்தினால்...
வேலைக்குப் பிந்தினால்...
எதுவும் சறுக்கினால்...
எண்ணற்ற சாட்டுக்களை
ஆளுக்காள்
அடுக்குவதைப் பார்த்தீர்களா?
"ஆடத் தெரியாதவளுக்கு
அரங்கு(மேடை) சரியில்லையாம்"
என்றாற் போல
"பாடத் தெரியாதவனுக்கு
இருமல், தடிமன், காய்ச்சல்"
என்றாற் போல
எதற்கெடுத்தாலும்
சாட்டுச் சொல்லித் தப்ப நினைப்பது
"காலத்தைக் கோட்டை விட்டது" என்று
பொருள் கொள்ளடா!
அட போடா!
எல்லாம் முடிஞ்சு
தோல்வி கண்ட வேளை தான்
அதை, இதை, உதை
மறந்திட்டேனே என்கிறாய்...
செயலில் இறங்கு முன்
எண்ணிப் பார்த்திருக்கலாம்...
காலம் கடந்து வந்த அறிவு
ஏதுக்கடா உதவும்?
எல்லாம் தோற்ற பின்னே
எனது ஊழே(விதி) என்று
யாருக்கடா
அமைதி பேணு என்கிறாய்...
"ஊழை(விதியை)
அறிவாலே(மதியாலே) வெல்லு" என்பது
"சாட்டுகளுக்கு வேட்டு வையடா" என்று
அடிக்கடி நினைவூட்டத் தானேடா!
சரியாகச் சொன்னீர்கள் ஐயா... சரியான திட்டமிடுதல் வேண்டும்...
ReplyDeleteதங்கள் மதியுரையை வரவேற்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
வரும்முன் காப்போம், என்ற பழமொழியை நினைவுக்கு வந்து விட்டதய்யா....
ReplyDeleteKillergee
www.killergee.blogspot.com
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
Deleteமிக்க நன்றி.