Tuesday, 8 April 2014

பள்ளிக்குச் செல்லும் சுமைதாங்கிகள்

பள்ளிக்கூடம் போகிற பிள்ளைகள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்களோ எனக்குத் தெரியாது. தெருப் பேச்சாளர்கள் பிள்ளைகளைப் பார்த்து என்னமோ சொல்கிறாங்களே! கொஞ்சந்தான் கேட்டுப் பார்ப்போமே!
முகத்தார் : அங்கே பாரு, ஒரு பிள்ளை ஒல்லிப் பொதியும் ஒரு பிள்ளை பூசணிக்காய் போல பெரிய பொதியும் பள்ளிக்குச் சுமந்து போறாங்களே...

சிவத்தார் : பட்டினத்துப் பள்ளிக்குப் போறவை ஒல்லிப் பொதியும் நம்மூர்ப் பள்ளிக்குப் போறவை பெரும் பொதியும் சுமப்பினமே!

முகத்தார் : ஆட்களோ எலும்புந் தோலுமாக, பொதிகளோ ஆட்களை விடப் பெரிசே...

சிவத்தார் : எட்டுப் பாட வேளையும் பட்டென்று எடுத்துப் படிக்க வேண்டிய நூல்கள் தான்...

முகத்தார் : சின்னப் பொதிப் பட்டினத்துப் பிள்ளைகள், நம்மூர்ப் பிள்ளைகளைப் போல படிக்கிறெல்லையே?

சிவத்தார் : ஒல்லிப் பொதிக்குள்ள மடிக் கணினியடா (notebook)... எழுதிக்
கிறுக்காமல் படிக்கத்தான்...

முகத்தார் : குழந்தை குட்டிகளைப் பெத்துப்போட்டு, பள்ளிக்குப் பொதி சுமக்க விடுகிறதோ கணினியைக் கொடுத்து கையெழுத்துப் போடத் தெரியாமல் பண்ணுறதோ நல்லாயில்லைப் பாருங்கோ...

சிவத்தார் : படிப்பிக்கிற ஆட்கள் பள்ளியில படிப்பிக்காமல், பிள்ளைகள் சுமந்து சென்றதை விரித்து வாசிக்க வைச்சுப்போட்டு வீட்டை கலைக்கிறாங்களே...

முகத்தார் : ஆண்டவா! அளவுக்கு மிஞ்சி நீண்டவா! இஞ்ச கொஞ்சம் வாப்பா! சின்னஞ் சிறிசுகள் படுகிற பாட்டை பாரப்பா...

சிவத்தார் : ஆண்டவன் வரமுதல்ல... நான் போட்டு வாறேனே...

11 comments:

  1. இப்படி சுமைதாங்கிகளாய் பிள்ளைகளை மாற்றுவதை பள்ளி நிர்வாகம் சிந்தித்துப் பார்த்து மாற்றணும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் நல்லெண்ணத்தை வரவேற்கிறேன்.

      Delete
  2. வருந்துவதைத் தவிர வேறென்ன செய்வது? பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் நல்லெண்ணத்தை வரவேற்கிறேன்.

      Delete
  3. பெற்றோர்கள் முதலில் மாற வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் நல்லெண்ணத்தை வரவேற்கிறேன்.

      Delete
  4. உங்கள் கவலை எல்லோருக்குமே இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு என்றுதான் புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் நல்லெண்ணத்தை வரவேற்கிறேன்.

      Delete
  5. நியாயமான கவலை தான் என்ன செய்வது காலத்திற்கு ஏற்ப மாறியாக வேண்டிய சூழ் நிலை தான். இவற்றை சுமந்து நடந்து நடந்து முதுகும் வளைந்த படியே நடப்பார்கள் பொதி இல்லாத போதும். மாற்றங்கள் வந்தால் நல்ல விடயம் தான்.
    நன்றி ! வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் நல்லெண்ணத்தை வரவேற்கிறேன்.

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.