Friday, 25 April 2014

கணினி பழுதடைந்த பின்னே...

அடே! மச்சான்! அடி! தோழி!
எனக்கொரு மடிக்கணினி (Laptop) - 2011 இல்
மச்சாளும் மச்சானுமாய்க் கொடுத்து உதவினாங்க...
அப்பவெல்லாம் - நான்
மடிக்கணினி (Laptop) பழுதடைந்துவிட்டால்
பாதிப்பு என்னவாகுமென்று
எப்பனும் எண்ணிப்பார்க்கவில்லையே!
2014 சித்திரையாள் வந்தாள் - என்
மடிக்கணினியும் (Laptop) பழுதாச்சு...
பட்டினி வயிற்றோடு
பலதும் பத்தும் எண்ணிப்பார்த்து
என்னாலே இயலாமல் போயிற்றே!
தொழில்நுட்பவியலாளரிடம் நீட்டினால்
ஆளை விக்கிற விலையில
திருத்தச் செலவென்றார்...
எனது எல்லாத் தகவலையும்
மீளநிரப்ப (Backup எடுக்க) முடியல...
எனது வலைச்சேமிப்பில (Online Drive இல)
வைப்பிலிட்ட தகவல் தான்
ஈற்றில் எனக்கு உதவிச்சே!
என்ன தான் இருந்தாலும்
பணத்தை ஈந்து கணினியை மீட்டு
விட்ட, தொட்ட இடத்தில இருந்து
எல்லா வலைப்பூக்களையும்
மீள நடாத்த வந்தாச்சு உறவுகளே!
எப்படியோ
கணினி இயங்கிய வேளை
கிட்டாத அறிவு எல்லாம்
கணினி இயங்க மறுத்த வேளை
கற்றுக்கொள்ள வேண்டியதாச்சே!

6 comments:

  1. கற்றுக்கொள்வது - வாழ்விலும் சிலது அப்படித்தான் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. வணக்கம்

    தொடருங்கள் பயணத்தை
    இதைய நிலைதான் எனக்கு வந்தது... புதியது வேண்டியாச்சி

    என்பக்கம் கவிதையாக
    எப்போது ஒளிருமட வசந்த காலம்...... வாருங்கள் அன்போடு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. சரியாக ஸ்மூத்தாக எல்லாம் சென்றால் நாம் எதையும் கற்றுக் கொள்ளமாட்டோம்.
    பிரச்சனைகளும் தவறுகளும் தான் நிறையக் கற்றுக் கொடுக்கும். நான் எப்போதும் தவறில்லாமல் எதையும் செய்யவே பிரியப்படுவேன்.இதனால் முக்கியமான விடயங்களை தெரிந்து கொள்ள சந்தார்ப்பம் அமைவதில்லை அதை பல விடயங்களில் உணர்ந்தேன். இதனால் புதிய விடயங்களை கற்றுக்கொள்ளவும் கண்டு பிடிக்கக் கூடிய மூளையை சரியாக உபோகிக்க முடியாமலும் போகிறது என்பது நான் உணர்ந்த விடயம். நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.