மூண்டு சில்லு (Auto) வண்டியெடுத்து
ஊருக்குள்ள உழைக்கலாமென
வாடகைக் கொள்வனவுக்கு (Leasing) வாங்கிய
நம்மாளு
உழைப்பேதும் கைக்கெட்டாமல்
நாலஞ்சு கட்டுப்பணம் செலுத்தாமல்
கடைசியிலே
நடுத்தெருவிலே
மூண்டு சில்லு (Auto) வண்டியை
பறிகொடுத்து (வழங்கிய நிறுவனம் பறிக்க)
ஊரோரமாய் ஒதுங்கி நின்று
இழப்புகளைக் கணக்கெடுக்க வேண்டியதாயிற்றே!
வண்டியைப் பறிகொடுத்த
நம்மாளு
வணிகருக்குத் (Business ஆளுக்குத்) தான்
வாடகைக் கொள்வனவு (Leasing)
பொருந்துமே தவிர
தனியாளுக்குச் சரிப்பட்டு வராதென
எண்ணி என்ன நன்மை!
எங்கேயாவது வேலை செய்து
கைக்கெட்டியதைக் கையாளப் பழகி
கிடைக்கின்ற வருவாயை வைத்து
வாழ முயன்றவன் வென்றிட
ஆழமறியாமல் காலை வைத்தவன்
கண்டதெல்லாம் தோல்வியே!
பதிவர்களுக்கான செய்தி : http://wp.me/pTOfc-9c என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள்.
வணக்கம்
ReplyDeleteசபாஷ்.... சரியாச் சொன்னிங்கள்.....
வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteநன்றி.
தொல்லையுள்ள தொழில் விளையாட்டாகி போனதால் வந்ததன் விளைவோ?
ReplyDeleteஇது முன்னேற்றமே அல்ல...
ReplyDeleteதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteநன்றி.
மூண்டு சில்லு (Auto),
ReplyDeleteவாடகைக் கொள்வனவு (Leasing),
முதலான சொற்கள் எனக்குப் புதிதாக உள்ளன.
ஈழத்தில் புழக்கத்தில் உள்ளனவா நண்பரே? கவிதை உள்ளடக்கம் அருமையாக உள்ளது, உருவத்திலும் சொற்செட்டிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுக்கலாமே? நல்ல விடயங்களைச் சொல்லும்போது அவை கூடுதல் தேவை.
தாங்கள் சொல்வது போல் இனிவரும் பதிவுகளில் திருத்தம் செய்கிறேன்.
Deleteதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றி.
''..ஆழமறியாமல் காலை வைத்தவன்
ReplyDeleteகண்டதெல்லாம் தோல்வியே!..'' Ethuvum unmaije...
Vetha.Elangathilakam
"மூன்று சில்லு" என்பதனையே நண்பர் "மூண்டு சில்லு" என்று யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் உரைக்கின்றார். முத்து நிலவன் சொல்வதுபோல உருவத்திலும் சொற்செட்டிலும் நிச்சயமாகக் கூடுதல் கவனம் தேவை.
ReplyDeleteதாங்கள் சொல்வது போல் இனிவரும் பதிவுகளில் திருத்தம் செய்கிறேன்.
Deleteதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றி.