வீசுற காற்றில் பட்டெனப் பறக்கிற
ஆடைகளே அணிந்த
அழகுப் பெண்ணாட
இளைய ஆண்கள் நோக்க
அரங்கு முட்டியே வழிய
பொழுதும் போக்கிடப் பணமுமே கரையுதே!
பணமுமே கரைந்தால் ஆட்களே தேடுவர்
கரைகிற பொழுதில்
குணமுமே மாறுவதால்
ஆளுக்கு ஆள்தான் முட்டிட
ஆங்கே முட்டியோர் மோத
அரங்கு சட்டெனக் குழம்பிடக் கலைந்ததே!
கலைந்தே சென்றவர் செயலைப் பார்த்தால்
அப்பன் ஆத்தாளே
எப்பனும் அறியாமல்
உணர்ச்சிகள் முறுக்கேற இளசுகள்
தெருவெளித் தவறு செய்திட
நாட்டவர் நடத்தை கெட்டுப் போச்சுதே!
பதிவர்களுக்கான செய்தி : http://wp.me/pTOfc-9c என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள்.
வணக்கம்
ReplyDeleteகலைந்தே சென்றவர் செயலைப் பார்த்தால்
அப்பன் ஆத்தாளே
எப்பனும் அறியாமல்
உணர்ச்சிகள் முறுக்கேற இளசுகள்
தெருவெளித் தவறு செய்திட
நாட்டவர் நடத்தை கெட்டுப் போச்சுதே
உண்மைதான்.... உண்மைதான்... சிறப்பாக சொன்னீர்கள்..வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய நிகழ்வை எடுத்துச் சொன்னவிதம் அருமை
ReplyDeleteதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteநன்றி.
இன்றைய நிலை - உண்மை தான் ஐயா...
ReplyDeleteதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteநன்றி.