தேவை வரும் போது தான்
மனிதன் தன் மூளைக்கே
வேலை கொடுக்கின்றான்!
பிரிவு வந்த பின்னர் தான்
மனிதன்
பிரிந்தவர் செய்த நன்மைகளைக் கூறி
அழுது துன்பப்படுகிறான்!
வயிறு கடிக்கையில் தான்
மனிதன்
தொழிலின் அருமை பற்றி
அறிந்து கொள்கின்றான்!
தொழிலைத் தேடும் போது தான்
மனிதன்
தான் கற்க மறந்ததை
நினைவூட்டிக் கற்கின்றான்!
ஊரார்
ஒதுக்கி விட்ட போது தான்
மனிதன்
தன் ஒழுக்கத்தை
கொஞ்சம் சரிபார்க்கின்றான்!
நீங்கள்
எப்படிப் போய் எங்கு வந்தாலும்
தவறு செய்த பின்னரோ
பாதிப்பு அடைந்த பின்னரோ
தானே தெளிவடைகின்றீர்கள்!
நீங்கள்
எதிர்பார்க்கும் வண்ணங்களில்
உங்கள் எண்ணங்களை
இப்படி இருந்தால்
எப்படி இருக்குமெனச் சரிபாருங்களேன்!
கோட்பாடுகள்(தத்துவங்கள்)
ஒரு போதும் பொய்ப்பதில்லையே!
''...கோட்பாடுகள்(தத்துவங்கள்)
ReplyDeleteஒரு போதும் பொய்ப்பதில்லையே!...'''
ஆம் நல்லபடி வாழ்ந்தால் எந்தத் தொல்லையுமேஇல்லை.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
Deleteமிக்க நன்றி.