Saturday 13 June 2015

எனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 03

சென்ற பதிவில் (http://eluththugal.blogspot.com/2015/05/2015-02.html)
"இயங்குநிலைப் (Animation) படத்தை வைத்து மதுரையில் நான் கண்ட மலையை அடையாளப்படுத்தி விட்டீர்களா? அந்த மலை பற்றிய தங்களுக்குத் தெரிந்த தகவலைப் பின்னூட்டமாகத் தாருங்களேன்." என்றெழுதியதற்கு ஒத்தக்கடைக்கு அப்பால் "ஒற்றைக் கல்லாலான ஆ(யா)னை மலைதான் அது" என்றும் ஆனை மலை பற்றி அறிஞர் கரந்தை ஜெயக்குமார் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார் (http://karanthaijayakumar.blogspot.com/2015/04/blog-post.html) என்றும் அறிஞர்கள் பகிர்ந்தனர்.

நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் செல்லப்பிள்ளைகளைப் பாருங்கள்...

விடிந்தால் தைப்பூசப் பெருநாள்! விடியுமுன்னரே (நடு இரவில்) நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் வீட்டிற்குச் சென்றாச்சு. அங்கே இறங்கியதும் சோதிப் பெருவிழா காலை ஆறரை மணிக்கு முதாலாவது சோதிப் பேரொளி பார்க்க வேண்டும் குளித்து முழுகி வேட்டியைக் கட்டி வள்ளலார் கோவிலில் காலை வைத்தாச்சு. அங்கே இலட்சக் கணக்கான வள்ளலார் விரும்பிகள் (பக்தர்கள்) வந்திருந்தனர். 

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான திருச்சபைக்கு நுழையும் வழியைப் பாருங்கள்.

தொடரும் சோதி வழிபாட்டில் சோதிப் பேரொளி தெரிகிறது என்று எல்லோரும் வள்ளலார் கூறிய அருள் மொழியான (மந்திரமான) "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி" எனச்சொல்லி சோதிப் பேரொளியைப் பார்க்கத் தலையை உயர்த்தினர். என்னை (நானோ கட்டையன்) நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) தூக்கிச் சோதிப் பேரொளியைக் காட்டினார். நானும் அவ்வாறே அவரைத் தூக்கிக் காட்டினேன்.

அதிகாலைச் சோதிப் பேரொளி பார்க்கக் கிடைத்தது பெரும்பேறு என்று வழிபாட்டை முடித்துக் கொண்டு வீதியை வலம் வரச் சென்றோம். ஞானசபை ஊடாக அன்னதான அறிவிப்பு; வீதி வழியே  "சாப்பிடுங்கோ... சாப்பிடுங்கோ..." என்று பொங்கல், சாதம் எனக் கொடுத்தார்கள். ஆங்காங்கே ஆட்டுக்கால் சூப்பு என்று தந்தார்கள். அதாவது ஆட்டுக்கால் போன்ற வேர், மற்றும் சித்த மருத்துவ மூலிகை கலந்த குடிநீர் தான், அது! அதனைப் பருகினால் உடலிலுள்ள பல நோய்கள் நீங்கும் என்று அங்கு குழுமிய அறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு 2015 மாசி தமிழகம் வந்து வடலூர் வள்ளலார் நினைவும் தைப்பூசப் பெருநாள் பற்றியும் எனது எண்ணங்களைப் பகிர்ந்தாலும் எனக்கு நிறைவு இல்லை. ஆகையால், கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மேலதீகத் தகவலைப் பெறலாம்.

வள்ளலார் சித்தி பெற்ற இடமான வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பத்தில், திரு அறை தரிசனம் இடம்பெறுகிறது. அங்கும் சென்றிருந்தேன். திரு அறை தரிசனம் கடந்து ஓர் நீரோடை இருந்தது. வள்ளலார் அவர்கள் தனது பெருவிரலால் கீறியதால் உருவானதாகச் சொல்லப்படுகிறது. அங்கெடுத்த படங்களே கீழே தரப்படுகிறது.


பிறிதொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
(தொடரும்)




16 comments:

  1. உங்களுடன் நாங்களும் சென்ற உணர்வு.....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. நல்ல தகவல்கள் சகோதரா.
    மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. வணக்கம்
    தங்களின் பயண அனுபவத்தை தெளிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. வணக்கம் !

    அர்த்தமுள்ள பயணங்கள் நேரில் கண்டதுபோல் உணர்வு வருகிறது தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. பயணத்தை நானும் தொடர்கிறேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. வணக்கம், நானும் இது போல் அங்கு சென்றது நினைவில் வருகிறது, ஆனால் உணவுப்பொருட்கள் வீனாவது மனதிற்கு வருத்தம் இல்லையா? தங்கள் பதிவுக்கு நன்றி. தொடர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. உணவுப்பொருட்கள் வீணாவது உள்ளத்திற்கு வேதனை தான்
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. பயணத்தொடர் அருமையாக இருக்கு ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  8. அருமையான பயணம் இல்லையா நண்பரே! தங்களது பல இடுகைகள் விடுபட்டுள்ளது ...பார்த்துக் கொண்டிருக்கின்றோம்...தொடர்கின்றோம்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.