திரைப்படங்களிலே தான்
நீதிமன்று எப்படியிருக்குமென
நான் பார்த்தேன்!
கறுப்புத்துணியாலே
நீதிதேவதையின் கண்ணை
ஏன் தானோ
கட்டி வைத்திருக்கிறார்களென
எண்ணிப்பார்த்த நினைவிருக்கு!
கையூட்டு (லஞ்சம்) வேண்டும்
சான்று கூறுவோர் (சாட்சிகள்),
காவற்றுறையினர்,
சட்டவாளர்கள் கூறும்
கருத்துகளைப் பார்க்காமல் இருக்கவா
"நீதிதேவதையின்
கண்ணைக் கட்டினார்களோ!" என
திரைப்படக் கதை வசனமொன்று
நினைவிற்கு வருகிறதே!
உண்மையிலேயே
குற்றமிழைத்தவன் தப்பித்துக்கொள்ள
ஏதுமறியாதவனே
ஒறுப்புக்கு (தண்டனைக்கு) உள்ளாவதை
நீதிதேவதை பார்க்கக்கூடாதென
கறுப்புத்துணியால் கண்ணைக் கட்டியோர்
எண்ணிப்பார்த்தனர் போலும்!
சட்டம், நீதி என்பன
கையூட்டுக் (லஞ்சக்) கைகளிலா
சட்டம், நீதி பேணுவோரின் செயலிலா
ஆண்டவா - நீரும்
இங்குள்ளை நிலைமையைப் பார்க்கிறீரா?
எப்போதும் பத்திரிகைகளில்
நீதி கிடைக்கவில்லையெனத் தான்
செய்திகள் வெளிவருகிறதே!
நீங்கள் சொல்வது போல் தான் நினைக்கத் தோன்றுகிறது...
ReplyDeleteதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
Delete