Thursday, 6 June 2013

வாழ்த்துக்கள்


கிறிஸ்மஸ், புத்தாண்டு, தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

பணிவாகத் தெரிவிப்பதில்
எவ்வளவு மகிழ்வு உண்டாகிறதோ
அவ்வளவு மகிழ்வு ஊற்றெடுப்பதற்கு
இந்நாட்களில் இருந்தாவது
புகைத்தல், மது, விலைமாது பக்கம்
நாடாமல் இருப்பது நலமே!
பலம் என்னவென்றால்
வாழ்த்துக்கள் தெரிவிப்பது போல
நல்லொழுக்கம் உள்ளவர்களாக
நாட்டுக்கு நன்மை செய்பவர்களாக
வாழ்ந்து காட்டுவதேயாகும்! 

Tuesday, 21 May 2013

நான் வாழ நாலும் வேண்டும்


கை கடித்தால்
கைகுலுக்க எவர் வருவார்...
வயிறு கடித்தால்
வாலாட்ட நாயும் வருமா?
கெட்டு நொந்தால்
வழிகாட்ட எவர் வருவார்...
பட்டுத் தெளிந்தால்
உன்னைவிட எவர் வேண்டும்?
"உன்னை நீ அறி"
அன்பு, அறிவு, ஆளுமை, வருவாய் என
என்றும் - இவை
நான்கும் இருந்துவிட்டால்
நலமாய் - உன்
வாழ்வு நகருமே!

கற்புப் பற்றி....


வன்மைகள்
காவலாக இருப்பதால் தான்
காக்கப்படுகிறது கற்பு!

மென்மைகள்
காவலாக இருப்பதால் தான்
பறிக்கப்படுகிறது கற்பு!

கற்பென்பது ஒழுக்கமே!

என்னடி பண்ணுற?


மாமியார் : என்னடி பண்ணுற?

மருமகள் : நானும் மாமியார் ஆனால் என்ன பண்ணலாம் என எண்ணுகிறேன்

நினைவில் வருவது


ஆசிரியர் : பாடங்கள் நினைவில் வருகிறதா?

மாணவன் : படிப்பு நினைவில் வராதாம்...

ஆசிரியர் : அப்ப என்னடா வரும்?

மாணவன் : பறவை முனியம்மா அடிக்கடி கனவில் வருகிறா...

Thursday, 16 May 2013

ஒரு வரிப் பொய்


இன்று முழுக்கச் சாப்பிட மறந்து போயிட்டேனே!

ஒரு வரி உண்மை


என் மனைவி தாய்மை அடைஞ்சிட்டாளே!

ஒன்றை விட்டிட்டார்கள்!


அகவை எத்தனை? வருவாய் எவ்வளவு? என்று கேட்ட பிறகு...

தரகர் :  பல இலட்சம் காசு, வீடு வளவு, காணி எல்லாவற்றுடனும் ஒரு பெண் இருக்கு, அவளைக் கட்டு எனக் கேட்டார்!

அழகிய பெண் :  என்னைக் காதலிக்கிறீங்களா? எனக் கேட்டாள்!

நான் :  இருவரும் ஒன்றை விட்டிட்டார்கள்!

உண்மை :  நான் திருமணம் ஆகியவர்.

ஒண்டும் ஒட்டுதில்லையே!


நோயாளி : கொஞ்ச நாளாக ஒண்டும் ஒட்டுதில்லையே ஐயா?

மருத்துவர் : வழமையாக என்ன சாப்பிடுவியள்?

நோயாளி : உண்டதெல்லாம் வாயாலையும் வயிற்றாலையும் போகுதையா?

மருத்துவர் : வயிற்றாலை போகாதே?

நோயாளி : ஐயா, மலம் செல்லும் வழியால போகுதையா!

மருத்துவர் : விரும்பிய வேளை எலுமிச்சங் காயை மணக்கவும் மூன்று வேளை தேனை நக்கவும்.

நோயாளி : அதுவும் ஒட்டாட்டி

 மருத்துவர் : என் கிட்ட வா

உடன்படாத உள்ளங்கள்


பெற்றவர்கள் சோதிடத்தில் தாலிவளம் பார்க்க
கண்டதே காதல் கொண்டதே கோலமெனப் பிள்ளைகள்
ஊரொன்று கூடிக்குவிய மணநாள் நல்வேளையில்
மணமகள் மாற்றானுடன் ஓட்டமெனச் செய்தி பரவுகிறது
"தேட்டமில்லாத தேடும் உறவுகள்..."